பதிவு செய்த நாள்
12
மார்
2019
01:03
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, உடுமலையில் பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்.,9 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. கம்பம் போடுதல் நிகழ்ச்சி, ஏப்., 16ம் தேதியும், கொடியேற்றம் 19ம் தேதியும் நடக்கிறது. பூவோடு நிகழ்ச்சியும், 19ம் தேதி துவங்கி, 23ம்தேதி நிறைவடைகிறது.பல்வேறு வேண்டுதல்களோடு, உடுமலை மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகள், மற்ற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பூவோடு வேண்டுதல் நடத்துகின்றனர்.திருவிழா துவங்குவதற்கு ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், உடுமலையில், பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.