பதிவு செய்த நாள்
12
மார்
2019
01:03
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த அக்னிமாரியம்மன் வீற்றிருப்பதாக கருதப்படும் இக்கோவிலில், பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும். மாசி மாத நிறைவினையொட்டி, நேற்று கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள், கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி வழிபட்டனர். விழாவினையொட்டி, தினசரி இரவு, அம்மன் பல்வேறு வாகனங்களில் ஊர்வலம் வரவுள்ளார். வரும், 17ல் மறுகாப்பு கட்டுதல், 24ல் வடிசோறு, 25ல் தீ மிதித்தல், 26ல் கிடா வெட்டுதல், 27ல் மஞ்சள் நீராடல் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.