பதிவு செய்த நாள்
16
மார்
2019
02:03
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, திருக்கச்சிநம்பி கோவிலில், மாமுல்படி எனப்படும், வருஷோத்ஸவம், மாசி மாதத்தில், 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு, உற்சவம், மார்ச், 5ல் துவங்கி, தொடர்ந்து நடந்து வந்தது.நேற்று முன்தினம் (மார்ச்., 14ல்), ஆடிசன்பேட்டை செட்டி தெருவில் வீதியுலாவும், மண்டக படியும் நடந்தது.மாசி மாத மிருசீரிடம் நட்சத்திரமான நேற்று (மார்ச்., 15ல்) மாலை, வரதராஜபெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளினார். அங்கு, சேவை சாற்றுமுறை நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.