பதிவு செய்த நாள்
17
மார்
2019
11:03
ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊட்டியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 9:15 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 9:30 மணிக்கு நவகலச பூஜை, 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மதியம், 2:50 மணிக்கு பஜனை பாடல்கள், மாலையில் சுப்ரமணிய கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.இன்று, காப்புகட்டுதல், ஏப்., 12 காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் தேர் முகூர்த்தகால் நடுதல், ஏப்., 15 மதியம், 12 மணிக்கு தேர் கலசம் ஏற்றுதல், 17 மஞ்சள் நீராட்டு கொடியிறக்கம், ஏப்., 19 ம் தேதி விடையாற்றி உற்சவம், அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவையொட்டி மார்ச், 18 முதல், ஏப்., 15 வரை உபயதாரர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் சார்பில் தேர் ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தில் ஆதிபராசக்தி, துர்கை, பராசக்தி, காமாட்சியம்மன், ராஜ ராஜேஸ்வரி, கருமாரியம்மன், மீனாட்சி அம்மன், பட்டதரசியம்மன், ெஹத்தையம்மன், சரஸ்வதி உட்பட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் மாரியம்மன் திருவீதி உலா வருகிறார்.விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல், ஏப்., 16 மதியம், 1:55 மணிக்கு நடக்கிறது. இதற்கான, ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.