பதிவு செய்த நாள்
17
மார்
2019
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. விழா நடக்கும். 15 நாட்களில், ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, நேற்று முன்தினம் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இதில், 10 லட்சத்து, 5,885 ரூபாய் ரொக்கம், 65 கிராம் தங்கம், 143 கிராம் வெள்ளி, மலேசிய நாட்டு ரூபாயான, இரண்டு ரிங்கித் நோட்டு, காணிக்கையாக கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.