திருபுவனை: மதகடிப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது.இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அன்று காலை 11:30 மணிக்கு விநாயகர் பூஜையும், பிற்பகல் 3:00 மணிக்கு ஐயனாரப்பனுக்கு ஊரணி பொங்கல். இரவு 7:00 மணிக்கு கொடியேற்றம் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக ஆராதனை், தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று இரவு 10:00 மணிக்கு குடல் பிடுங்கி மாலை அணிந்து, அம்மன் வீதியுலா நடந்தது. இன்று பகல் 12:00 மணிக்கு மதகடிப்பட்டு மயானத்தில் மயான கொள்ளையும், இரவு 10:00 மணிக்கு அக்னிகரகம், அம்மன் வீதியுலா நடக்கிறது. நாளை பகல் 12:00 மணிக்கு அம்மன் தேர் திருவிழாவும், மாலை 4:00 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது.