பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
ஏற்காடு: ஏற்காடு, பிலியூர் கிராமத்தில் உள்ள மலைஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (மார்ச்., 17ல்) கோலாகலமாக நடந்தது. நேற்று (மார்ச்., 17ல்) காலை, 8:50 மணியளவில் கோவில் கோபுர உச்சியில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா கொண்டாடப் பட்டது. மேலும், அந்த தீர்த்தம் மக்கள் மீது தெளிக்கப்பட்டது.
பிலியூர் கிராமத்தில் உள்ள, மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மக்கள் நடந்து மட்டுமே செல்ல முடியும். அங்கு கோவில் தவிர்த்து, வேறு எந்த வீடுகளும் இல்லை.
அதுமட்டுமின்றி ஏற்காட்டில் உள்ள, 67 மலை கிராமங்களில் உள்ள கோவில்களில், லிங்கம் வைத்து வழிபாடு நடத்தப்படும் இரண்டு கோவில்களில் இதுவும் ஒன்று. ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, ஊர் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.