பதிவு செய்த நாள்
18
மார்
2019
03:03
வீரபாண்டி: சேலம், ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு தேர்த்திருவிழா இன்றிரவு (மார்ச்., 18ல்), 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை (மார்ச்., 19ல்) இரவு, 9:00 மணிக்கு கருட வாகனம், 20ல், இரவு ஆஞ்சநேயர் வாகனம், 21ல், இரவு குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும், 22ல் நடக்கிறது.
அன்று மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு, 10:00 மாணிக்க புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. விழாவையொட்டி, தேர்களை சுத்தம் செய்து சாரங்கள் கட்டி துணி போர்த்தி அலங்கரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.