திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கண்டமத்தான் கிராமத்தில், சடையப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திட்டக்குடி அடுத்த கண்டமத்தான் கிராமத்தில் விநாயகர், மாசிபெரியசாமி, மாசிசடையப்பா, மாசிசின்னையா, இருச்சிஅம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவெடுக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி 16ம் தேதி மாலை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று (மார்ச்., 16ல்) காலை நாடி சந்தானம், யாகசாலை பூஜைகள் நடந்தது.காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு விமானங்கள் மற்றும் மூலவர் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.