பதிவு செய்த நாள்
02
மார்
2012
11:03
அவிநாசி : திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அரச மரத்தடி விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு, கொடிமரத்தின் கீழ் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிமரத்தின் கீழ் விநாயகப் பெருமான், சோமஸ்கந்தர், ஸ்ரீசண்முகநாதர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதங்கள் பாராயணம் செய்யப்பட்டன. அதையடுத்து கொடிமரத்தில் சுற்றப்படும் துணி, பிரகார உலாவாக கொண்டு செல்லப்பட்டு, கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. செயல் அலுவலர் சரவணபவன், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வரும் 5ம் தேதி, தேரோட்டம் 24, 25ம் தேதிகளிலும், ஸ்ரீசுந்தரர் வேடுபறி காட்சி வரும் 27ம் தேதியும் நடக்கிறது.