பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
ப.வேலூர்: ப.வேலூர் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, தொடங்கியது. ப.வேலூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, பங்குனி மாதம் நடப்பது வழக்கம்.
இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் (மார்ச்., 16ல்) இரவு, கோவில் முன்பு கம்பம் நடுதல் நிகழ்ச் சியுடன் தொடங்கியது. வரும், 23 வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம். வரும், 24ல் மறுகாப்பு கட்டுதல், 25 - 31 வரை தினசரி இரவு அம்மன் திருவீதி உலா, ஏப்.,1 இரவு வடிசோறு நிகழ்ச்சி, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்; பின்னர் பரிவட்டம் சூட்டுதல் மற்றும் திருத்தேர் நிலை பெயர்த்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
மறுநாள் காலை திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல், 3ல் பொங்கல், மாவிளக்கு பூஜை, 4ல் அதிகாலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல், 5ல் மஞ்சள் நீராடல் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.