பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
மல்லசமுத்திரம்: வையப்பமலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 21ல், பங்குனி உத்திரதேர்திருவிழா நடக்கிறது.
மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மலை குன்றின்மீது வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி எனும் பெயரில் உள்ள முருகன் கோவிலில், வரும், 21ல் பங்குனி உத்திர தேர் திருவிழா நடக்கவுள்ளது. நாளை (மார்ச்., 20ல்) இரவு, 9:00 - 12:00 மணி வரையில் திருக்கல்யாண வைபோகம், 21 காலை, 10:00 மணிக்கு மலையைச் சுற்றி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து படிபூஜை செய்யும் நிகழ்ச்சி நடக்கும். மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.