பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
சென்னிமலை: சென்னிமலை அருகே உள்ள, நஞ்சுண்டஈஸ்வரர் கோவில், பங்குனி திருவிழாவை ஒட்டி, நேற்று (மார்ச்., 18ல்), பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை - ஊத்துக்குளி செல்லும் சாலையில், புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், பழமையான நஞ்சுண்டஈஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி மாத திங்கட்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இங்கு சுயம்பு லிங்கமாக, ஈஸ்வர் காட்சியளிக்கிறார். நேற்று (மார்ச்., 18ல்), பங்குனி மாத, முதல் திங்கட்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். கோவில் பிரசாதமாக, வெள்ளரிகாய்கள் வழங்கப்பட்டன.
கோவிலுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பாக, சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.