பதிவு செய்த நாள்
19
மார்
2019
02:03
புன்செய்புளியம்பட்டி: பங்குனி மாத முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு, அத்தனூர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. புன்செய்புளியம்பட்டி அடுத்த, குட்டகம் கிராமத்தில், அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
இங்கு, ஆண்டுதோறும், பங்குனி மாத, திங்கட்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று (மார்ச்., 18ல்) பங்குனி முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், ஏராளமான பெண்கள் பச்சை மாவிளக்கு எடுத்து, நெய் தீபம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். மதியம், அத்தனூர் அம்மன் உற்சவர், சப்பரத்தில் எழுந்தருளினார். தாசர்களுக்கு, பக்தர்கள், அரிசி படி வழங்கினர். விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் விளைவித்த, அரிசி, பருப்பு, மற்றும் காய்கறிகளை, தாசர்களுக்கு வழங்கி, சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.