பதிவு செய்த நாள்
22
மார்
2019
03:03
கரூர்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கரூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர்கோவில் உள்ளது.
இங்கு, பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ல் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாள்தோறும் காலை, பல்வேறு வாகனத்தில், உற்சவர் வீதி உலா நடந்தது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று (மார்ச்., 20ல்) காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பாலசுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம்ம், தீபாராதனை நடந்தது.