பதிவு செய்த நாள்
23
மார்
2019
03:03
திருத்தணி: திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
தினசரி மூலவர் அம்மனுக்கு, காலை, 8:00 மணிக்கு, சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகங் கள் நடைபெறுகின்றன.வரும், 27ம் தேதி, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.வரும், 29ம் தேதி, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம், அடுத்த மாதம், 7ம் தேதி, காலை, துரியோத னன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு, தீ மிதி திருவிழாவும், 8ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் ஆகியன நடைபெறுகின்றன.