பதிவு செய்த நாள்
24
மார்
2019
02:03
பரமக்குடி:பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனிபால்குட உற்ஸவ விழா சக்தி கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.்கோயிலில் 10 நாட்கள் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு வண்டிமாகாளி, குதிரை வாகனம் மற்றும் மின்தீப தேரில் அம்மன் வலம் வந்தார். நேற்று முன்தினம் இரவு கள்ளர் திருக்கோலத்துடன்வைகை ஆற்றில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை 5:00 மணிமுதல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக வைகை ஆற்றில் இருந்து பால்குடங்களைசுமந்து வந்தனர். பெரியபஜார், பெருமாள் கோயில், ஆதிமுத்தாலம்மன் கோயில்வழியாக கோயிலை அடைந்தனர்.காலை 10:30 மணிவரை தொடர்ந்து ஆயிர வைசிய சமூக நலச்சங்கம், இளைஞர் சங்கம்,மறுமலர்ச்சி பேரவை, செட்டியார் சங்கம், மதுரையார் என பல்வேறுஅமைப்பினர் சார்பில் பால்குடம்சுமந்துவந்த பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது. காலை 11:00 மணி முதல் மஞ்சள், திரவியம், சந்தனம், இளநீர்,பஞ்சாமிர்தம் என பல வகை அபிஷேகங்களைத் தொடர்ந்துகுடம், குடமாக பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள்சக்தி கோஷம் விண்ணை முட்ட கோஷமிட்டு அம்மனைதரிசித்தனர். இரவு அம்மன் சயன கோலத்தில் பூப்பல்லக்கில் வீதிவலம்வந்தார்.