வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை நேற்று நடந்தது. வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மேக மூட்டத்தினால் சூரிய ஒளி சரியாக விழவில்லை. நேற்று காலை சூரிய ஒளி சித்திரை மண்டபம், ராஜகோபுரம், அர்த்த மண் டபம் வழியாக மூலஸ்தானத்தில் சூரிய ஒளி சென்றது.சூரிய பூஜையில் வில்லியனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (25ம் தேதி) காலையில் சூரிய பூஜை நடைபெறும்.