பதிவு செய்த நாள்
25
மார்
2019
12:03
விழுப்புரம்:பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த பூவரசங்குப்பத்தில், லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று நடக்கும் சிறப்பு ஹோமம் பிரசித்திப் பெற்றதாகும்.சுவாதி நட்சத்திரமான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 211வது, நரசிம்ம சுதர்சன மகா ஹோமம் நடந்தது. ஹோமத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.