Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதைந்து கிடக்கும் கற்சிலைகளை ... எல்லாம் இங்கு ‘ஐந்து’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதை மாற்றிய லட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
02:03

காஞ்சிப்பெரியவர் முகாமிட்டிருந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சாய்ந்தபடி ஒரு ஆள் அமர்ந்திருந்தான். முரட்டு மீசையுடன் இருந்த அவனை பார்த்தால்  அடாவடி பேர்வழி போல தெரிந்தான். சாப்பாட்டு நேரத்தில் வெளியே போய் சாப்பிட்டு வருவான். மற்றபடி யாரிடமும் பேச மாட்டான். காஞ்சிப்பெரியவரை பார்த்தபடியே இருப்பான். இரவானவுடன் கிளம்பிச் செல்வான், மறுநாள் மறுபடியும் வருவான். இதுவே தொடர்கதையானது. வம்பு செய்யத் திட்டமிடுகிறானோ என பக்தர்கள் கலங்கினர். ஆனால் யாரும் கேட்கத் துணியவில்லை. ஒருநாள் காஞ்சிப்பெரியவர் அவனை அழைக்கவே, பவ்யமாக கைகட்டி நின்றான். “இதோ பார். அடாவடித்தனமான செயல்களில் நீ ஈடுபட்டிருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலரும் பயப்படுகிறார்கள். அதை திருத்திக் கொள்ளவும் உன்னால் முடியவில்லை. இது தானே பிரச்னை? அவனது கண்களில் கண்ணீர். மேலும் தொடர்ந்தார் காஞ்சிப்பெரியவர்.

“என்னை தரிசிக்கத் தானே  வந்திருக்கிறாய். ஆனால் அதற்கான தகுதியில்லை எனத் தவறாக கருதுகிறாய். அதனால் ஓரமாக அமர்ந்து கொண்டாய். நீயும் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே ஊர் ஊராக நான் சுற்றுகிறேன். பழசையெல்லாம் மறந்து விடு.  செய்த தப்புக்களால்’உன்னை நீயே பாவி’ என எண்ணி வருந்தாதே.’ராம... ராம’  என்ற நாமத்தை பக்தியுடன் சொல். பாவம் பறந்தோடும். இனி தப்பு செய்வதில்லை என்ற உறுதியுடன் செயல்படு. அப்போது அதிசயம் உனக்குள் நிகழ்வதைக் காண்பாய். ஒதுக்கியவர் கூட நெருங்கி வந்து அன்பு காட்டுவர்.  அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்.

இந்தா... லட்டு பிரசாதம் வாங்கிக் கொள். இந்த லட்டு போல உன் வாழ்வும் இனிக்கும். காஞ்சி காமாட்சியருளால் வரும் நாளெல்லாம் நல்ல நாளாக அமையும்” என்றார். நம்பிக்கையுடன் புறப்பட்டான் அவன். - திருப்பூர் கிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar