பதிவு செய்த நாள்
27
மார்
2019
02:03
சேலம்: சேலம், ஸ்ரீமத் தியாகராஜ சுவாமிகள், வேங்கட்ரமண பாகவதர் சுவாமிகள் மகோத்சவ சபை சார்பில், சிங்கமெத்தை சவுராஷ்டிரா திருமண மண்டபத்தில், 83ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று முன்தினம் (மார்ச்., 25ல்) தொடங்கியது. நேற்று, (மார்ச்., 26ல்)மேட்டூர் சகோதரர்கள் சஞ்சீவி, முரளி மற்றும் சென்னை மோகன் சந்தானம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (மார்ச்., 27ல்), சேலம் தன்யஸ்ரீ, மாம்பலம் சகோதரிகள் விஜயலட்சுமி, சித்ரா குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மார்ச்., 28ல்) மாலை, சேலம் நந்தகுமார், ஆதித்யசரண், சித்தார்த்தாவின் புல்லாங்குழல் இசை, மார்ச், 29ல் சேலம் கிருஷ்ணா பிருந்தாவன குழுவினரின், கோலாட்ட கலை நிகழ்ச்சி நடக்கிறது.