காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில், அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் பல இடங்களில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல உண்டியல்கள் நிரம்பியதை தொடர்ந்து, கோவில் அதிகாரி சுந்தர், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.