அந்தியூர்: அந்தியூர் அருகே, அண்ணமார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார். இன்று, மஞ்சள் நீராட்டு விழா நிறைவடைகிறது. இதேபோல் கவுந்தப்பாடி அருகே, புதூர் மாரியம்மன் கோவில், செந்தாம்பாளையம் மாரியம்மன், கோவில்களில் பொங்கல் விழா, நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.