பதிவு செய்த நாள்
29
மார்
2019
01:03
உடுமலை:உடுமலை, ராஜகாளியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, 19ம்தேதி கம்பம் போடுதல் மற்றும் 24ம்தேதி முனி விரட்டுதல், தீர்த்த அபி
ஷேகம், மாவிளக்கு, பூவோடு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்றுமுன்தினம் (மார்ச்., 27ல்), அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (மார்ச்., 28ல்), காலை, ராஜகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து, பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது. நாளை மறுநாள் (மார்ச்., 31ல்), கருப்பராயன் பூஜை நடக்கிறது.