கன்னிவாடி: கன்னிவாடியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏராளமானோர், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன், அம்மன் கங்கை புறப்பாடு நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.