பதிவு செய்த நாள்
30
மார்
2019
01:03
அந்தியூர்: அந்தியூர் அம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு, பக்தர்கள் தரப்பில், விறகு அனுப்பு வது தொடங்கியுள்ளது. அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில், பங்குனி மாதத்தில், குண்டம் விழா நடக்கிறது.
கோவில் வளாகத்தில் அமைக்கப்படும், 60 அடி நீள குண்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்துவர். நடப்பாண்டு விழா, ஏப்.,10ல், நடக்கவுள்ளது. தீ மிதி விழாவுக்கு, பக்தர்கள் காணிக்கையாக, விறகு தருவது வழக்கம். விழாவுக்கு இன்னும், 10 நாட்கள் உள்ள நிலையில், விறகு அனுப்புவதை, பக்தர்கள் தொடங்கி விட்டனர். அவர்கள் அனுப்பும் விறகுகள் கோவில் வளாகத்தில், மலை போல் குவித்து வைக்கப்படுகிறது.