பேசும் திறனற்ற பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு போதகர் ஒருவர் சென்றார். அங்கு பலகையில், “பேசும், கேட்கும் திறனற்றவர்களாக எங்களை ஏன் படைத்தார்?” என கண்டார். அதற்கு பதில் அளிக்காமல் வேறு சில விஷயங்களைப் பேசினார் போதகர். கேள்விக்குரிய பதிலை பிள்ளைகள் எதிர்பார்ப்பது புரிந்தது.
அப்போது எழுந்து சிறுவன் ஒருவன் சாக்பீசை எடுத்து “கடவுளே உம்முடைய பார்வைக்கு எல்லாம் நலமாக இருக்கிறது’ என்று எழுதினான்.
என்ன ஆச்சரியமான பதில்! அதாவது, ’கடவுளின் பார்வைக்கு எல்லாம் நலமாகத் தான் இருக்கிறது. பேசுபவர்கள், பேசாதவர்கள், பார்க்கும் திறன் உள்ளவர்கள்,
இல்லாதவர்கள் என அனைவரையும் அவர் படைத்திருக்கிறார். எல்லாரையுமே ஒன்று போலத் தான் பார்க்கிறார்’ என்னும் பொருளில் இருந்தது.
கடவுள் மீது பூரண நம்பிக்கை இருந்தால் பேசும் திறனற்ற தன்மையைக் கூட, அவர் கொடுத்த பரிசாக கருத முடியும்! குறைகளைக் கூட நிறைவாகக் காண விசாலமான மனம் வேண்டும் அல்லவா!