* தைரியமுள்ளவனின் இருப்பிடம் தேடி அதிர்ஷ்டம் தானாக வரும். அதற்காக உழைக்காமல் இருக்காதே. * இருப்பதில் திருப்தி கொள்; ஆனால் படிப்பு, வழிபாடு, தானம் இவற்றில் திருப்தி அடையாதே. * விதியை மட்டும் நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான். முயற்சி உள்ளவனுக்கு மட்டுமே வெல்லும் சக்தி உண்டு. * எல்லா உயிர்களிலும் கண்ணுக்கு தெரியாமல் கடவுள் ஒருவரே குடியிருக்கிறார். * துன்பம் நேரும் போதும் உடனிருப்பவனே நல்ல நண்பன். நல்லவர்களுடன் நட்பு கொள்வது அவசியம். * ஒழுக்கம் இல்லாமல் வாழ்வதை விட, உயிரை விடுவது மேலானது. * சோம்பல் இருக்குமிடத்தில், முன்னேற்றம் ஒருநாளும் உண்டாகாது. * சரியான திட்டமிடுதல் ஒன்றே, உன் பணியை எளிதாக்கும். * தீய சொற்கள், நெருப்பை விட பெரிய சேதத்தை உண்டாக்கும். * ரகசியமான விஷயங்கள், கசப்பான உண்மைகளை யாரிடமும் சொல்லாதே. * பிறர் செய்த சிறிய உதவியையும், பெரிதாக மதிப்பவனே சிறந்தவன். *பிறர் துன்பத்தையும், தன் துன்பமாகக் கருதுபவனே நல்லவன்.