பதிவு செய்த நாள்
03
ஏப்
2019
02:04
பல்லடம் : பருவாய் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், வெள்ளியங்கிரி மலைக்கு, 48வது ஆண்டாக பாதயாத்திரை செல்ல, பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தில், ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர், 1971ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வருகின்றனர். நேற்று (ஏப்., 2ல்), 48வது ஆண்டாக பாதயாத்திரை பயணத்தை துவக்கினர்.முன்னதாக, மாலை அணிந்த, 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், பருவாய் மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர். கோவில் வளாகத்தில், கும்மி ஆட்டம், காவடி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து நடைபயணமாக, வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.பாதயாத்திரை குழுவினர் கூறியதாவது:தொடர்ந்து, 48வது ஆண்டாக, வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை செல்கிறோம். ஏப்., 6 யுகாதி பண்டிகை அன்று, மீண்டும் ஊருக்கு திரும்புவோம். அன்று, வெள்ளியங்கிரி மலை, ஆண்டி சுனையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை, மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம்.அவர்கள் கூறினர்.