பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில், நடவாவி உற்சவம், வரும், 19ம் தேதி, பாலாற்றில் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், வரும், 19ல், சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறுகிறது.
திருமஞ்சனம்இதற்காக, 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து புறப்படுகிறார்.வழியில், காஞ்சிபுரம் அடுத்த, அப்துல்லாபுரம், தூசி, நத்தக்கொள்ளை, வாகை ஆகிய கிராமங்களுக்கு செல்கிறார்.பின், 19ம் தேதி மாலை, அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலில் எழுந்தருள்வார்.
அங்கு, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு, திருமஞ்சனம் நடைபெறும்.தொடர்ந்து, அன்று இரவு, அங்கிருந்து புறப்பட்டு, அப்பகுதியில் அமைந்துள்ள நடவாவி கிணற்றிற்குசெல்கிறார். பக்தர்கள் தரிசனம் முடிந்த பின், அன்று இரவு புறப்பட்டு செவிலி மேடு பாலாற்றுக்கு செல்வார். அங்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை நடைபெறும்.
தரிசனம் தீபாராதணை முடிந்து, அதிகாலை, ஆற்றில் இருந்து புறப்பட்டு, 20ல், காலை, 7:00 மணிக்கு கோவிலை சென்றடைகிறார். இத்திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர், பெருமாளை தரிசிக்க, பாலாற்றில் கூடவுள்ளனர்.