முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்ஸவ விழாவை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கலிட்டு, கிடா பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். பொது அன்னதானம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.