பதிவு செய்த நாள்
08
ஏப்
2019
10:04
மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்., 8) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் பவனி வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு ஏப்.,9 முதல் 14 வரை தினமும் காலை 7:00 மணிக்கு மாசி வீதிகளில் தங்கப்பல்லக்கு, இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடக்கிறது. ஏப்.,15 மீனாட்சி அம்மன் கோயில் ஆறுகால் பீடத்தில் இரவு 8:00 மணிக்கு மேல் 8:24 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்.,17 கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:50 முதல் 10:14 மணிக்குள் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், ஏப்.,18 மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.