பதிவு செய்த நாள்
08
ஏப்
2019
12:04
பெ.நா.பாளையம்: ஏத்தாப்பூர், வசிஷ்ட நதிக்கரை, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா, வரும், 16ல் நடக்கவுள்ளது.
அதை முன்னிட்டு, நேற்று (ஏப்., 7ல்) காலை, அம்மன் பச்சை பட்டினி விரதம் முடித்தல், கொடியேற்றம் நடந்தது. மேலும், ஐந்தாம் முறையாக பூச்சாட்டுதல் விழாவை முன்னிட்டு, மூலவர் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வரும், 15, காலை, உருளு தண்டம் போடுதல் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், சக்தி கரகம், முளைப்பாலி ஊர்வலம், பொங்கல் வைத்தல் நடக்கும். 16 காலை, 10:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும். 19ல் குங்குமம் அர்ச்சனை, ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடையும்.