மயிலம்:மயிலம் முருகர் கோவிலில் நேற்று (ஏப்., 8ல்) கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார் . ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.