பதிவு செய்த நாள்
09
ஏப்
2019
03:04
ஆர்.கே.பேட்டை: நாகபூண்டி, நாகேஸ்வர சுவாமி கோவிலில், 10ம் தேதி, சித்திரை திருவிழா துவங்குகிறது. 16ல் திருக்கல்யாணம் நடைபெறும்.ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில் உள்ளது நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில். இந்த கோவிலின் சித்திரை திருவிழா, 10ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று மாலை, ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து, சிம்மம், யானை என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி, 16ம் தேதி காலை, தேரில் பவனி வருகிறார்.அதை தொடர்ந்து, 17ல், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். 23ம் தேதி, சாந்தி அபிஷேகம் மற்றும் 24ல் கேடய உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.