நெகமம்:நெகமம், காட்டம்பட்டிபுதூரில், பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் பிரகாரங்களும் உள்ளதால், அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.கோவில் வளாகத்தில் முன்மண்டபம், அமுதமடம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று (ஏப்., 9ல்) காலை, 4:00 மணிக்கு வாஸ்து பூஜை, 5:00 மணிக்கு கணபதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து கரிவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.