அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், முன்பின் தெரியாத அவளிடம் எப்படி பேசுவதென தயங்கினார். ராமனின் வரலாற்றை ஒரு கதை போல இனிமையுடன் பாடினார். சீதையின் முகம் மலர்ந்தது. இருந்தாலும் பாடியவன் ராவணனின் ஆளாக இருக்குமோ என்ற சந்தேகமும் உண்டானது. ஆனால், அனுமன், ‘ராமசாமியின் துõதன் நான்!’,” என்று சொல்லி ராமரின் கணையாழியைக் காட்டியதும் முழுமையான நம்பிக்கை ஏற்பட்டது. சீதையும் தன்னிடமிருந்த சூடாமணியைக் காட்டி, ‘பிரிவுத்துயரை நினைத்து வருந்தும் போதெல்லாம் ஆறுதல் தந்தது இந்த சூடாமணி தான். இதனை ராமனிடம் கொடு,” என்றாள். அனுமன் சீதாதேவியை மூன்று முறை வலம் வந்து அதைப் பெற்றுக் கொண்டார்.