பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
அன்னூர்: அன்னூர், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 17ம் தேதி நடக்கிறது.
அன்னூர் - மேட்டுப்பாளையம் ரோட்டில், பழமையான ஆனைமலை கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தீர்த்த கிணறு, பெரிய அளவிலான யானை சுதை ஆகியவை
உள்ளன. இக்கோவில் முழுமையாக திருப்பணி செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 16ம் தேதி துவங்குகிறது.
மாலையில், விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை, மருந்து சாத்துதல் நடக்கிறது. 17ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வேம்பரசு விநாயகர், ஆனைமலை கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.