பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
கோவை:பக்தர்களின் சரண கோஷத்துடன், கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆறாட்டு விழா, நேற்று (ஏப்., 10ல்) கோலாகலமாக நடந்தது.
இரண்டாவது சபரிமலை என்ற பெயரை பெற்ற, கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி பொற் கோவிலில், 50ம் ஆண்டு விழா கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் தேதி முதல் களபாபிஷேகம் உள்ளிட்ட, பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்வான ஆறாட்டு விழா, நேற்று (ஏப்., 10ல்)மாலை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு காவடி, தெய்யம், பூதன்திறா மேளதாளங்களுடன், சுவாமி வீதி உலா நடந்தது. சின்னசாமி நாயுடு ரோடு, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, வழியாக வீதி உலா மீண்டும் கோவில் அருகே உள்ள, ஆறாட்டு குளத்தை அடைந்தது. தொடர்ந்து ஆறாட்டு நிகழ்வு நடந்தது.