பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
உடுமலை:பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, அக்காண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா இன்று (ஏப்., 11ல்) நிறைவு பெறுகிறது.பொம்மநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற,
அக்காண்டீஸ்வரி அம்மன் கோவிலில், மாயவர், கருப்பராயன், பொன்னர்சங்கர், தங்கை பருவதம், வீரமகாமுனி, வீரபாகு சுவாமிகளின் பங்குனி திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி
கொலு வைத்தலுடன் துவங்கியது.
தொடர்ந்து, கடந்த 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை, காலை, 9:00 மணிக்கு கிளி பிடிக்க செல்லுதல், இரவு 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்துச்செல்லுதல், உள்ளிட்ட நிகழ்வுகளும், நேற்றுமுன்தினம் (ஏப்., 9ல்) சுவாமி மண் பொங்கல் பானை மீது நடக்கும் நிகழ்வும் நடந்தன. நேற்று (ஏப்., 10ல்) திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது.விழாவின் நிறைவாக, இன்று (ஏப்., 11ல்) இரவு வீரமாத்தி அம்மனுக்கு விருந்து படைத்து சிறப்புபூஜை நடக்கிறது.