ராமநாதபுரம் மாரியூரில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2019 03:04
வாலிநோக்கம்:ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு நேற்று (ஏப்., 9ல்)காலை 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து ஏப்.,18 வரை காலை 9:00 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா புறப்பாடும் நடக்கிறது. ஏப்.,19 காலை 6:00 மணிக்கு கடலில் வலைவீசும் படலம்,9:00 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம், மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்து வருகின்றனர்.