குன்னூர்: குன்னூர் அருவங்காடு ஒசட்டி அருகே கொடுங்கலூர் பகவதியம்மன் கோவிலில், 50வது ஆண்டு திருவிழா நடந்தது.
கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், கொடியேற்றம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆகியவை நடந்தன. அருவங்காடு பாலாஜி நகர் அருகே ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து ஒசட்டி கோவிலுக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் பல்வேறு வேடமணிந்தும், வெளிச்சப்பாடு நிகழ்ச்சியுடனும் பங்கேற்றனர். செண்டை மேளம் முழங்க பெண்கள் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து சிறப்பு பூஜை தன்னார பாடல் ஆகியவை இடம் பெற்றன. கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை ஆகியவை இடம் பெற்றன. ஏற்பாடுகளை கொடுங்கலூர் பகவதியம்மன் கோவில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.