பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
03:04
ஈரோடு: ஈரோடு, பெரியமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு வழி கட்டணத்தில், 10 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பொங்கல், குண்டம் தேர்த்திருவிழா, மார்ச், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, ஏப்., 6ல் கம்பம் பிடுங்கும் விழாவுடன் நிறைவு பெற்றது. கம்பம்
நடப்பட்ட நாள் முதல், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசையில் நின்று கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வந்தனர். அக்னி சட்டி, அலகு, தீர்த்தம் என, கோவில் வளாகத்தில் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடி ஏற்பட்டது.
முதியவர்கள், குழந்தைகளுடன் வருவோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர், வரிசையில் நின்று செல்ல முடியாதவர்களுக்காக, கட்டண சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், 25 ரூபாய் கட்டணத்தில், ஐந்து லட்சத்து, 42 ஆயிரத்து, 825 ரூபாய், 50 ரூபாய் கட்டண வழியில், நான்கு லட்சத்து, 64 ஆயிரத்து, 506 ரூபாய் என, மொத்தம், 10 லட்சத்து, 7,320 ரூபாய் வசூலாகியுள்ளது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் கூறியதாவது: ஈரோடு பெரியமாரியம் மன் கோவில் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகமாகி வந்ததால், தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியவில்லை. குறிப்பாக,
பொங்கல் வைக்க இடமில்லை, வாகனங்கள் நிறுத்த இடமில்லை, முடிகாணிக்கை செலுத்த இடமில்லை, முடிகாணிக்கை செலுத்தியோர் குளிக்க இடமில்லை. கழிவறை வசதியில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறையின் கவனத்துக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது. விரைவில் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.