பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
03:04
ஈரோடு: தமிழ் புத்தாண்டுக்கு, சபரிமலையில் அன்னதானம் வழங்குவதற்காக, ஈரோட்டில் இருந்து ஐந்து டன் உணவு பொருட்கள், லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, உணவு பொருட்கள் அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி, இந்த தமிழ் புத்தாண்டுக்கு துவரம் பருப்பு, 200 கிலோ, உளுத்தம்பருப்பு, 200 கிலோ, கடலை பருப்பு, 200 கிலோ, பாசி பருப்பு, 100 கிலோ, பாசிபயறு, 100 கிலோ. மற்றும் நிலக்கடலை, 100 கிலோ, பொட்டுக்கடலை, 100 கிலோ, ரவை, 700 கிலோ, சாம்பார் பொடி, 100 கிலோ, சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் சேர்ந்து, 100 கிலோ, ரீபைன்ட் ஆயில், 15 லிட்டர் கொண்ட, 17 டின், காய்கறிகள், 2,000 கிலோ உள்ளிட்ட ஐந்து டன் உணவு பொருட்கள், நேற்று முன்தினம் (ஏப்., 9ல்), ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் இருந்து சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஐயப்பா சேவா சங்க கவுரவ தலைவர் சுந்தரராஜன், ஐயப்ப பக்தர்கள் ஹரிபாபு, சோமு, ராமதுரை உள்ளிட்டோர் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.