பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
03:04
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே, கே.கே.நகரிலுள்ள, ஸ்ரீஐய்யனாரப்பன், ஸ்ரீகருப்புசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சில நாட்களாக, யாக வேள்வி, வேதபாராயணம்,
ஐய்யனாரப்பன், கருப்புசாமி, கன்னிமார் தெய்வங்களுக்கு கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், உபசார பூஜை நடந்தது. நேற்று 10ல், காலை, யாகசாலையில் உள்ள புனித தீர்த்தம் நிரப்பிய குடங்களை தலையில் சுமந்து சென்று, கோபுர
கலசத்துக்கு ஊற்றிய சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, தீயணைப்பு துறை ஏற்பாட்டால், கோபுர உச்சியிலிருந்து பக்தர்கள் மீது, தீர்த்தம் பீய்ச்ச்சி யடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.
ஓராண்டு நிறைவு: ஆட்டையாம்பட்டி அருகே, மாமுண்டி சாலை, முத்தனம்பாளையம், முத்துமுனியப்பன் கோவில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு பங்குனியில், நடந்தது.
இதனையொட்டி, கும்பாபிஷேக ஓராண்டு நிறைவு விழா மற்றும் பங்குனி பொங்கல் விழா, நேற்று (ஏப்., 10ல்) நடந்தது. முத்து முனியப்பன் சுவாமிகளுக்கு, புது வேட்டி, மலர் மாலைகள் அணிவித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சுற்றுவட்டாரங்களிலிருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். வேண்டுதல் வைத்த பக்தர்கள், திரிசூலம், வேல்களை மலர்களால் அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்துவந்து, கோவிலில் காணிக்கையாக செலுத்தினர்.
தீர்த்தக்குட ஊர்வலம்: சங்ககிரி, பக்காளியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 2ல் பூச்சாட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (ஏப்., 10ல்), பவானி காவிரியாற்றி லிருந்து, திரளான பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து, திருச்செங்கோடு சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர், தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்: பெத்தநாயக்கன்பாளையம், மத்தூர் அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று (ஏப்., 10ல்) மாலை, தேரோட்டம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர். மேலும், வாழப்பாடி, சின்னகிருஷ்ணாபுரம், பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, மத்தூர் பகுதிகளிலிருந்து, தீச்சட்டி, பூங்கரகம் எடுத்தும், விமான அலகு குத்தியும், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
*ஆனத்தூர் சிவன் கோவிலில் இன்று (ஏப்., 11ல்)கும்பாபிஷேக விழா விழுப்புரம்:ஆனத்தூர் கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர், லட்சுமிநாராயணபெருமாள், முத்துமாரியம்மன் கோவில்
கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் கலிவரத விநாயகர், தேனாம்பிகா சமேத
ராமலிங்கேஸ்வரர், கனகவல்லிநாயகா சமேத லட்சுமிநாராயணபெருமாள், ஆஞ்சநேயர், யுதிஷ்டிரபீமார்ஜுன நகுல சகாதேவ சமேத திரவுபதி, முத்துமாரியம்மன், பிடாரியம்மன், கெங்கையம்மன் சுவாமிகளுக்கான கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று
நடத்தப்படுகிறது.அனுக்ஜை, அங்குராற்பனம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி மற்றும் முதல் கால பூஜை நடத்தி விழா துவங்கியது.
இன்று (ஏப்., 11ல்) காலை 6 மணிக்கு கலிவரத விநாயகர், தேனாம்பிகா சமேத ராமலிங்கேஸ் வரர், பிடாரியம்மன் சுவாமிகளுக்கு புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கனகவல்லிநாயகா சமேத லட்சுமிநாராயணபெருமாள், ஆஞ்சநேயர், யுதிஷ்டிரபீமார் ஜுன நகுல சகாதேவ சமேத திரவுபதி, முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாளு க்கு சிறப்பு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அனைத்து உற்சவமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடத்தப்படுகிறது.விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.