திருமங்கலம்:திருமங்கலம் ஒன்றியம் சவுடார்பட்டி, எஸ்.வளையபட்டி, மீனாட்சிபுரம், வால் நாயக்கன்பட்டி கிராம மக்கள் இணைந்து முத்தாலம்மன், சபரிமலையான் கோயில் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.
எஸ்.வளையபட்டியில் உள்ள இக்கோயிலில் நேற்று (ஏப்., 11ல்) காலை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை யில் அக்னிசட்டி ஊர்வலம், புதைகுழி தாண்டி நேர்த்தி செலுத்துதல் நடந்தது. ஒற்றுமையாக திருவிழா நடத்தியதன் மூலம் மழை கிடைக்கும், வறட்சி நீங்கும், முத்தாலம்மன் நோய் நொடியில் இருந்து மக்களை காப்பாற்றுவார் என்பது இக்கிராமமக்களின் நம்பிக்கை.