காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ராமநவமி மஹோத் ஸவம், இன்று (ஏப்., 13ல்) நடைபெறுகிறது.
சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், ராமஹரி பஜனை கோவில் மற்றும் பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகளுக்கு, திருமஞ்சனம் நடைபெற உள்ளது.மாலை, 6:00 மணிக்கு ராமபிரானுக்கு பஜனையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.