பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
12:04
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா பல்வேறு சமூகத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை மாயூரநாதசுவாமி கோவிலில் இருந்து நீர் காத்த அய்யனார் சுவாமி அலங்கரிக்கப்பட்டு யானை வாகனத்தில் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க பஞ்சு மார்க்கெட், நேரு சிலை, பழைய பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியாறு ரோடு வழியாக பழையபாளையம் என்.ஆர்.கே மண்டபத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்டுவிசஷே பூஜைகள் நடைபெற்றது.
பெரிய சாவடி முன்பு மந்தையில் வான வேடிக்கைகள்காட்சிகளுக்கு பின் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் மாயூரநாச சுவாமி கோயிலை அடைந்தார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று திருவிழாவை கண்டு களித்ததுடன் சாமியை தரிசித்து சென்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக மூன்று கோட்டை தலைவர்கள் ராம்சிங் ராஜா, ரஜூ ராஜா, பலராம் ராஜா பங்கேற்றனர். மகுமை பண்டு தலைவர் கோபாலகிருஷ்ண ராஜா பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சித்திரை விழா கமிட்டி தலைவர் விஜயராகவ ராஜா, செயலாளர் முரளிராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
* ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டு தெருவினர் சார்பில் சித்திரை வெண்குடை திருவிழா நடந்தது. சீனிவாசன் புதுத்தெரு தலைமையில் ஆனையூர் தெரு, அம்மன் பொட்டல், மத்திய வடக்குத் தெரு இணைந்து நீர் காத்தலிங்கம் அய்யனார் சுவாமியினை எழுந்தருள செய்து மேளதாளத்துடன் ஆலி ஆட்டம், குதிரை ஆட்டம், பொம்மலாட்டம், ஒயிலாட்டம்,ஆகியவை முன் செல்ல செம்புலி சித்தன் அதிவீரராஜ் வெண்குடை ஏந்தி ஊர்வலமாக ஏழு தெருக்களை சுற்றி வந்தார். சித்திரை வெண்குடையானது பெரிய கடை பஜாரில் உள்ள காமாட்சியம்மன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து மாலை கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி பெரியகடை பஜார் வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்து காட்சியளித்தார். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர்கள் ராஜூ, செல்வம், மனோகரன், தங்கச்சாமி மற்றும் ஏழு தெரு நிர்வாகிகள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.