பதிவு செய்த நாள்
06
மார்
2012
11:03
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், முள்ளாட்சி மாரியம்மன் கோவில் 68வது ஆண்டு பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில் முள்ளாச்சி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 68வது ஆண்டு விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று வெகுவிமரிசையாக துவங்கியது. வரும் ஒன்பதாம்தேதி மயில்வாகனத்திலும், 15ம் தேதி சிம்மவாகனத்திலும், 16ம் தேதி புஷ்ப பல்லக்கிலும் ஊர்வலமாக வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 17ம் தேதி காலையில் வெண்ணெய் தாழியும், இரவு ரிஷப வாகன காட்சியும் நடக்கிறது. 18ம் தேதி காலை முதல் காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், மாலையில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பால் குடம் எடுத்தல், தீ மிதித்தல், 20ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாட்டை, கோவில் செயல் அலுவலர் நீதிமணி, தக்கார் மதியழகன் மற்றும் பக்தர்கள், வர்த்தகர்கள் செய்து வருகின்றனர்.