வேப்பம்பட்டு: கங்கை அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வேப்பம்பட்டு அடுத்த, பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் விமானம், பரிவார தெய்வங்கள் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் விமானத்தின் மீது குருக்கள் பிரசன்ன குமார பட்டாச்சார்யா புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து, மூலவர் கங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு, 8 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும் நடந்தது.